← கவிதைகள் · poems

குறிக்கோளற்ற வாழ்க்கை

a purposeless life

குறிக்கோளற்ற வாழ்க்கை

நானொரு வண்ணத்து பூச்சியாகவே மாற விரும்புகிறேன். ஒரு மலரை விட மென்மையாய் காற்றில் சறுக்கி விளையாடியபடி கல்லறைகளில், நெடுஞ்சாலைகளில், கணிக்க முடியாத வழித்தடங்களில் பயணம் மேற்கொள்வேன். போகும் வழித்தடத்தில் ஒரு மலர் கூட இல்லாமலா போய்விடும்? இதோ வருகிறது சாவு ஊர்வலம்.

-ஹக

i want to become a butterfly. softer than a flower, gliding and playing in the wind, i will travel through cemeteries, highways, unpredictable paths. can any path truly have not a single flower along the way? here comes the funeral procession. — haka